இந்தியா

திரிபுராவில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு!

திரிபுரா மாநிலத்தில் இன்று மாலை 4 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையவுள்ளது.

DIN

திரிபுரா மாநிலத்தில் இன்று மாலை 4 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையவுள்ளது.

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மும்முனைப் போட்டியாக மோதுகின்றன.

இன்று மாலை 4 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் இறுதிகட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பல்வேறு தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால் காங்கிரஸ் தரப்பிலிருந்து முக்கிய தலைவர்கள் பிரசாரத்திற்கு வராதது கட்சித் தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

இன்று பிரசாரம் நிறைவடைந்தவுடன் மாநிலம் முழுவதும் பிப்ரவரி 17 காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. தேர்தலுக்கான பாதுகாப்புப் பணியில் மத்திய ஆயுதப் படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை ரூ. 44 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT