இந்தியா

இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 9 பெட்டிகள் தடம் புரண்டது!

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 9 பெட்டிகள் தடம் புரண்டன.

DIN

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 9 பெட்டிகள் தடம் புரண்டன.

இரண்டு சரக்கு ரயில்களின் ஓட்டுநர்களும் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேருக்கு நேர் மோதியதில் இரண்டு ரயில்களும் சேதமடைந்துள்ளன. இந்த விபத்தைத் தொடர்ந்து, வாரணாசி-லக்னோ மற்றும் அயோத்தி-பிரயாக்ராஜ் ரயில் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தடம் புரண்ட பெட்டிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் தண்டவாளத்தில் இருந்து அகற்றப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தால், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT