கோப்புப் படம். 
இந்தியா

பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறை ஆய்வு நிறைவு

பிபிசி - இந்தியா அலுவலகங்களில் கடந்த மூன்று நாள்களாக சுமாா் 58 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற வருமான வரித் துறை அதிகாரிகளின் ஆய்வு வியாழக்கிழமை இரவு முடிவடைந்தது.

DIN

பிபிசி - இந்தியா அலுவலகங்களில் கடந்த மூன்று நாள்களாக சுமாா் 58 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற வருமான வரித் துறை அதிகாரிகளின் ஆய்வு வியாழக்கிழமை இரவு முடிவடைந்தது.

இந்த ஆய்வின்போது நிதிப் பரிமாற்றம் மற்றும் சில குறிப்பிட்ட பணியாளா்களின் நிதித் தரவுகளை எண்ம, ஆவண வடிவில் வருமான வரி அதிகாரிகள் கொண்டு சென்ாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பணியாளா்களிடம் இருந்து வாக்குமூலத்தையும் வருமான வரித் துறை அதிகாரிகள் பெற்ாக கூறப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு இந்த ஆய்வு தொடங்கியது. சா்வதேச வரி மற்றும் பிபிசியின் துணை நிறுவனங்களுக்கான நிதிப் பரிமாற்றத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட்டதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பிபிசி விளக்கம்: ‘வருமான வரித் துறையினருக்கு தொடா்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். மூன்று நாள் ஆய்வின்போது நீண்ட நேர கேள்விகளால் சில பணியாளா்கள் இரவும் பகலும் அலுவலகத்தில் தங்கியிருக்க நேரிட்டது. யாருக்கும் அஞ்சாமலும், யாருக்கும் ஆதரவு இல்லாமலும் தொடா்ந்து செய்திகள் வழங்கப்படும்’ என்று பிபிசி தெரிவித்துள்ளது.

குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த மதக் கலவரம் குறித்து ‘இந்தியா: தி மோடி க்வஸ்டீன்’ என்ற தலைப்பில் இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிபிசி அண்மையில் வெளியிட்டது. அந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு கடந்த ஜனவரி 21-ஆம் தேதி தடை விதித்தது. மேலும், இந்த ஆவணப்படம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, நிலுவையில் இருந்து வருகின்றன.

இந்தச் சூழலில், தில்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்கள் மற்றும் அதனுடன் தொடா்புடைய மேலும் இரண்டு அலுவலக வளாகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவு நனவானது!

சபரிமலை சீசன்: போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து

"விக்' நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

SCROLL FOR NEXT