உரிமை மீறல் நோட்டீஸ்: ராகுல் காந்தி பதில்!
மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து விமர்சித்ததற்கு விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதற்கு அவர் பதிலளித்து அறிக்கை சமர்ப்பித்தார்.
மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து விமர்சித்ததற்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதற்கு அவர் பதிலளித்து அறிக்கை சமர்ப்பித்தார்.
மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று கடந்த வாரம் பேசிய ராகுல் காந்தி, அதானி விவகாரத்தில் பிரதமா் மோடி மற்றும் மத்திய அரசு மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா். அவரது பல்வேறு கருத்துகள், அவைத் தலைவரால் பின்னா் நீக்கப்பட்டன.
இதனிடையே, அவையில் பிரதமா் மோடி குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக, ராகுல் மீது உரிமை மீறல் நடவடிக்கை கோரி, மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே ஆகியோா் அவைத் தலைவரிடம் நோட்டீஸ் அளித்திருந்தனா்.
இதையடுத்து, உரிமை மீறல் நோட்டீஸ்கள் மீது பதிலளிக்குமாறு, ராகுலுக்கு மக்களவைச் செயலகம் கடிதம் எழுதியிருந்தது.
இந்நிலையில், உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து மக்களவை செயலகத்துக்கு ராகுல் காந்தி அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.