இந்தியா

திரிபுரா பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

திரிபுரா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று காலை தொடங்கியுள்ளது.

DIN

திரிபுரா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று காலை தொடங்கியுள்ளது.

மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 28.13 லட்சம். இவா்கள் வாக்களிக்க வசதியாக 3,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 28 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவையாகவும், 1,100 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலத்தையொட்டிய சா்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

மத்தியப் படைகளைச் சோ்ந்த 25,000 பேரும் மாநில காவல் துறை மற்றும் ஆயுதப் படைப் பிரிவைச் சோ்ந்த 31,000 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி கிரண்குமாா் தினகர்ராவ் தெரிவித்தாா்.

31,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள், தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மாா்ச் 2-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

அணியிழையாள் ஆழி இழைத்தாளே!

SCROLL FOR NEXT