10, 12ம் வகுப்பில் இடைநின்ற 4 லட்சம் மாணவர்கள்!
உத்தரப் பிரதேசத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 4 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 4 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக காலை, மதியம் என இரு பிரிவுகளாக நடைபெற்ற முதல் நாள் தேர்வில் சுமார் 4 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என அம்மாநில கல்வித் துறை தெரிவித்துள்ளது.
காலை நடைபெற்ற தேர்வில் 2,18,189 பேரும், மதியம் நடைபெற்ற தேர்வில் 1,83,865 பேரும் பொதுத்தேர்வை எழுதவில்லை.
Advertisement
Advertisement
மேலும், மாநிலம் முழுவதும் நடைபெற்றத் தேர்வில், முறைகேடில் ஈடுபட்டதாக 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.