இந்தியா

லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க அனைத்து  முயற்சிகளும் எடுக்கப்படும்: பிரதமர் மோடி

DIN

லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று  பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் கூறியுள்ளார்.

லடாக் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்கியால், தனது ட்விட்டர் பக்க பதிவில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு லடாக்கிற்கு அனைத்துவித கால நிலைக்கும் ஏதுவான வகையில் 4.1 கிலோமீட்டர் நீளம் ஷிங்குன்லா சுரங்கப்பாதையை வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிப்பதற்காக ரூ.1681.51 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

பிரதமர் மோடியின் இந்த முடிவுக்கு லடாக் தொகுதியின் மிகவும் பின்தங்கிய பகுதியான ஜனஸ்கர் பகுதியில் உள்ள லுங்னக் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்களின் மகிழ்ச்சி, வரவேற்பு மற்றும் நன்றியையும் தெரிவித்துள்ளனர் என்று பதிவிட்டுள்ளார். 

இது குறித்து பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
 
”லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க அனைத்து விதமான முயற்சிகளிலும் மேற்கொள்ளப்படும்” என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

விவசாயிகளுக்கு கோடை பருவ நெல் நடவு பயிற்சி

எலக்ட்ரிக் கடையில் இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT