இந்தியா

சத்தீஸ்கர் ஆளுநரானார் விஸ்வபூஷண் ஹரிசந்தன்!

சத்தீஸ்கரின் ஒன்பதாவது ஆளுநராக விஸ்வபூஷண் ஹரிசந்தன் இன்று பதவியேற்றார். 

DIN

சத்தீஸ்கரின் ஒன்பதாவது ஆளுநராக விஸ்வபூஷண் ஹரிசந்தன் இன்று பதவியேற்றார். 

ஆளுநர் மாளிகையில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அருப் குமார் கோஸ்வாமி, ஹரிசந்தனுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். 

89 வயதான ஹரிசந்தன், சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, ஆந்திர மாநிலத்தின் ஆளுநராகப் பணியாற்றினார். 

சமீபத்தில் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்ட அனுசுயா உய்கேக்குப் பின் ஹரிசந்தன் ஆளுநராகப் பதவியேற்றுள்ளார். 

இந்நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் நாராயண் சண்டேல், மாநில அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஒடிசாவைச் சேர்ந்த ஹரிசந்தன், அந்த மாநிலத்தில் ஐந்து முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நான்கு முறை அமைச்சராகப் பணியாற்றினார்.

1980-இல் ஒடிசாவில் பாஜகவின் தலைவராக இருந்த அவர் மேலும் மூன்று முறை மாநிலக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1996 முதல் 2009 வரை 13 ஆண்டுகள் ஒடிசா சட்டப்பேரவையின் பாஜக கட்சித் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் பசுமை விருது: செப்டம்பா் 2 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை - தன்பாத், போத்தனூா் - பரௌனி இடையே சிறப்பு ரயில்

பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

வீடு புகுந்து நகை திருடிய 3 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT