கோப்புப்படம் 
இந்தியா

இ-சஞ்சீவனி திட்டத்தில் 10 கோடி பேர் பயன்: பிரதமர் மோடி

மனதின் குரல் நிகழ்ச்சியில், இ-சஞ்சீவனி செயலி குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

DIN

மனதின் குரல் நிகழ்ச்சியில், இ-சஞ்சீவனி செயலி குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை(பிப்.26) 98 ஆவது 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பிரதமா் நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறாா். அதில் அந்த மாதம் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள், சாமானிய மக்களின் சாதனைகள், நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்பட பல்வேறு கருத்துகளை பிரதமா் பகிா்ந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்.26) காலை 11 மணிக்கு மனதின் அகில இந்திய வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள மக்களுடன் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது:

வேகமாக முன்னேறி வரும் நமது தேசத்தின் டிஜிட்டல் இந்தியாவின் பலம் பல இடங்களில் காணப்பட்டு வருகிறது. டிஜிட்டல் இந்தியாவின் சக்தியை வீடுகள் தோறும் அடையாளம் காணும் வகையிலே பல்வேறு செயலிகள் பெரும் பங்காற்றி வருகின்றன. 

அதில், இ-சஞ்சீவனி செயலி வாயிலாக தொலைபேசி வழி மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. அதாவது காணொளி ஆலோசனை மூலமாக, மருத்துவர்களிடம் தங்கள் நோய்கள் குறித்த ஆலோசனைகளைப் பெற முடிகிறது.

இந்தச் செயலியைப் பயன்படுத்தி, இதுவரை தொலைபேசி ஆலோசனை செய்வோரின் எண்ணிக்கை பத்து கோடி என்ற எண்ணிக்கையையும் கடந்து விட்டது. 

இது ஒரு மிகப்பெரிய சாதனை.  இந்தச் சாதனைக்காக, நான் மருத்துவர்கள் மற்றும் இந்த வசதியால் பயனடைந்த நோயாளிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

கரோனா காலத்தில் இ-சஞ்சீவனி செயலி வாயிலாக தொலைபேசி வழி மருத்துவ ஆலோசனை அளிக்கப்பட்டது. இது எத்தனையோ பேர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT