இந்தியா

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரானார் குஷ்பு!

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

DIN

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள குஷ்பு, முதலில் திமுக, காங்கிரஸ் கட்சிகளில் பதவி வகித்த நிலையில் பின்னர் பாஜகவில் இணைந்து தற்போது அக்கட்சியில் செயற்குழு உறுப்பினராக உள்ளார். 

இந்நிலையில் இவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'தேசிய பெண்களுக்கான ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு பாஜக சார்பில் குஷ்புவுக்கு வாழ்த்துகள். பெண்களின் உரிமைகளுக்கான அவரது விடாமுயற்சி மற்றும் போராட்டத்திற்கான அங்கீகாரம் இது' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் பாஜகவினர் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT