தில்லியில் இதுவரை 4,469 பேருக்கு டெங்கு பாதிப்பு: 9 பேர் பலி! 
இந்தியா

தில்லியில் இதுவரை 4,469 பேருக்கு டெங்கு பாதிப்பு: 9 பேர் பலி!

தலைநகர் தில்லியில் கடந்தாண்டு 4,469 பேருக்கு டெங்கு தொற்று பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2022-ம் ஆண்டில் டெங்குவால் 9 பேர் இறந்துள்ளதாக தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

ANI

தலைநகர் தில்லியில் கடந்தாண்டு 4,469 பேருக்கு டெங்கு தொற்று பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2022-ம் ஆண்டில் டெங்குவால் 9 பேர் இறந்துள்ளதாக தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, 

2022-ஆம் ஆண்டில் 4,469 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 

டிசம்பர் கடைசி வாரத்தில் மட்டும் 108 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. 2022-ஆம் ஆண்டில் மலேரியாவால் ஒருவர் உயிரிழந்தார். 

2017, 2018, 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் தில்லியில் மலேரியாவால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 2020இல் ஒருவர் பலியாகியுள்ளார். 

அதேசமயம், டிசம்பர் கடைசி வாரத்தில், டிசம்பர் 31 வரை 1 சிக்குன்குனியா வழக்குப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் 48 சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகியுள்ளன. சிக்குன்குனியாவால் யாரும் இறக்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT