இந்தியா

கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,509 ஆக உயர்வு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு 214 ஆக பதிவாகியுள்ளது. 

ANI

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு 214 ஆக பதிவாகியுள்ளது. 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 214 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 4.46 கோடியாக உயர்ந்துள்ளது. 

கரோனா தொற்றுக்கு கேரளத்தில் 2 பேர், மகாராஷ்டிரம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஒன்று என கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் பலியானதை தொடர்ந்து மொத்தம் 5,30,718 ஆக உயர்ந்துள்ளது. 

அதேநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,509 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 98.80 சதவீதமாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,87,983 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில், இதுவரை 220.13 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT