இந்தியா

பானிபட்டிலிருந்து கர்னால் மாவட்டத்திற்குள் நுழைந்த ஒற்றுமை  நடைப்பயணம்!

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் சனிக்கிழமை காலை ஹரியாணாவின் கர்னால் மாவட்டத்தில் இன்று காலை மீண்டும் தொடங்கியது. 

PTI

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் சனிக்கிழமை காலை ஹரியாணாவின் கர்னால் மாவட்டத்தில் இன்று காலை மீண்டும் தொடங்கியது. 

கராவுண்டாவில் உள்ள கோஹண்ட் கிராமத்தில் தொடங்கிய நடைப்பயணத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களான பூபேந்தர் சிங் ஹூடா மற்றும் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் கலந்துகொண்டனர். 

நடைப்பயணத்தின் அட்டவணையின்படி, இன்றிரவு இந்திரியில் நிறுத்தப்பட்டு மறுநாள் காலை குருக்ஷேத்ராவில் இருந்து தொடங்குகிறது. 

கடந்த வியாழக்கிழமை மாலை உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஹரியாணாவிற்குள் நுழைந்தது. அதைத்தொடர்ந்து, வெள்ளியன்று பானிபட்டில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய காந்தி, பொருளாதாரம் மற்றும் வேலையின்மை குறித்து பாஜக அரசை கடுமையாக சாடினார். 

தமிழகத்தில் தொடங்கிய காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து ஹரியாணாவில் தற்போது நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT