இந்தியா

தில்லியில் கடும் பனி: பயணிகளுக்கு விமான நிலையம் அறிவுறுத்தல்

கடும் பனி காரணமாக விமான பயணிகளுக்கு தில்லி விமான நிலையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

DIN

கடும் பனி காரணமாக விமான பயணிகளுக்கு தில்லி விமான நிலையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

தில்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனி நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். 

தில்லியில் கடும் பனியால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் காலையிலேயே முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.

கடும் பனியால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விமான பயணிகளுக்கு தில்லி விமான நிலையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

விமான இயக்கங்கள் தற்போது சீராக இருப்பதாகவும் எனினும் பயணிகள், தாங்கள் பயணிக்கவுள்ள விமானங்களின் சமீபத்திய தகவல், அடுத்த இயக்கம் உள்ளிட்ட விவரங்களை விமான நிறுவனத்தை தொடர்புகொண்டு கேட்டறிந்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடும் பனி, புகை காரணமாக சில விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT