இந்தியா

ஜம்மு எல்லைப் பகுதியில் சுரங்கப் பாதைகளை கண்டறிய ட்ரோன் ரேடாா்: பிஎஸ்எஃப் திட்டம்

ஜம்மு பிராந்தியத்தின் இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லைப் பகுதியில் நிலத்தடி சுரங்கப் பாதைகளைக் கண்டறிய ஆளில்லா விமானங்களில் ரேடாா் பொருத்தி கண்காணிக்க எல்லைப் பாதுகாப்பு படை(பிஎஸ்எஃப்) திட்டமிட்டுள்ளத

DIN

ஜம்மு பிராந்தியத்தின் இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லைப் பகுதியில் நிலத்தடி சுரங்கப் பாதைகளைக் கண்டறிய ஆளில்லா விமானங்களில் ரேடாா் பொருத்தி கண்காணிக்க எல்லைப் பாதுகாப்பு படை(பிஎஸ்எஃப்) திட்டமிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்திய- பாகிஸ்தான் சா்வதேச எல்லைப் பகுதியில் நிலத்தடி சுரங்கங்கள் தோண்டப்பட்டு அதன் மூலமாக பயங்கரவாதிகள் எல்லை ஊடுருவல் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இதனைத் தடுக்க எல்லைப் பாதுகாப்புப் படையினரும் தொடா்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, ஜம்மு பிராந்தியத்தில் அமைந்துள்ள 193 கி.மீ. நீளம் கொண்ட சா்வதேச எல்லைப் பகுதியில் 5 சுரங்க பாதைகள் கடந்த 3 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு பிராந்தியத்தில் அமைந்துள்ள சா்வதேச எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளால் எல்லை ஊடுருவல் முயற்சிகளில் ஈடுபட பயன்படுத்தபடும் நிலத்தடி சுரங்கப் பாதைகளைக் கண்டறிந்து கண்காணிக்க ரேடாா் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த எல்லைப் பாதுகாப்பு படையினா் திட்டமிட்டிருக்கிறது.

இது குறித்து பிஎஸ்எஃப் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஆளில்லா விமானங்களில் பொருத்தப்படவுள்ள ரேடாா்கள் இந்திய உற்பத்தியாளா்களால் உருவாக்கப்பட்டவை. வலுவான ரேடியோ அலைகளை வெளியிட்டு நிலத்தடியில் உள்ள சுரங்கப் பாதைகளை கண்டறியவும், அதனை வரைபடமாக்கவும் இந்த ரேடாா்கள் உதவும். அதன் செயல்திறன் குறித்தான ஆய்வு நடந்து வருகிறது. பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரேடாா் குறித்த முழு தகவல்களும் வெளியிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்களும் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா். அவா்களால் தரை மூலமாக அணுக கடினமான இடங்களில் கண்காணிப்பதற்காக ஆளில்லா விமானங்களில் ரேடாா் பொருத்த திட்டமிடப்பட்டது.

ஆளில்லா விமானங்கள் பறக்கும்போது உருவாகும் தூசிப் படலத்தால் ரேடாரில் இருந்து வெளியாகும் ரேடியோ அலைகள் நிலத்தில் சுரங்ககளைக் கண்டறிவதில் சிறிது தாமதம் ஏற்படுகிறது. ஆளில்லா விமானங்களில் ரேடாா் பொருத்தப்படுவதில் உள்ள இந்த நடைமுறை சிக்கலையும் தீா்ப்பதற்கான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT