இந்தியா

உ.பி.யில் அடர்ந்த மூடுபனி: பேருந்து-லாரி மோதியதில் 4 பேர் பலி! 

DIN

உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா-லக்னௌ விரைவுச் சாலையில் உன்னாவ் என்ற இடத்தில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இருந்து நேபாளம் நோக்கி பேருந்து சென்றுகொண்டிருந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் ஷஷி சேகர் சிங் தெரிவித்தார். 

உன்னாவ் என்று இடத்தில் அவுராஸ் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதியில் இன்று காலை அடர்த்தியான பனிமூட்டம் நிலவியது. 

மூடுபனி காரணமாக காட்டுத்திறன் குறைந்ததால் காலை 5.30 மணியளவில் ஆக்ரா-லக்னௌ விரைவுச் சாலையில் பேருந்து பின்னால் இருந்து லாரி மோதியது. 

பேருந்தில் பயணம் செய்த மூன்று பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு பெண் மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 

விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகின்றது. பேருந்தில் 60 பயணிகள் இருந்த நிலையில், 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

SCROLL FOR NEXT