இந்தியா

ஐதராபாத்-விஜயவாடா இடையே வந்தே பாரத் ரயில்: ஜன.19ல் தொடங்கி வைக்கிறார் மோடி!

PTI

தெலங்கானாவில் பல்வேறு ரயில்வே திட்டங்களையும், ஐதராபாத் மற்றும் விஜயவாடா இடையேயான வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பதற்காக ஜன.19-ல் பிரதமர் மோடி ஐதராபாத் செல்ல உள்ளார். 

மோடியின் மாநில பயணத்தையொட்டி, பாஜக மாநிலத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான பந்தி சஞ்சய் குமார் மற்றும் ஓபிசி மோர்ச்சா தேசியத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.லட்சுமணன் ஆகியோர் செகந்திராபாத் ரயில் நிலையத்துக்குச் சென்று தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். 

பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தெலங்கானாவில் பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஜன.19-ல் பிரதமர் மோடி ஐதராபாத் செல்கிறார். 

ரூ.700 கோடி செலவில் செகந்திராபாத் ரயில் நிலையத்தை நவீனமயமாக்குவதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார் மற்றும் காசிபேட்டையில் உள்ள பணிமனையின் கட்டுமானப் பணிகளை தொடங்க உள்ளார். 

இதேபோன்று, ரூ.1,231 கோடி செலவில் செகந்திராபாத் - மஹபூப் நகர் இரட்டிப்புப் பணிகளும் தொடங்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

SCROLL FOR NEXT