இந்தியா

முத்ரா கடனுதவி பெற்றதில் தமிழகம் முதலிடம்: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

DIN

முத்ரா கடன் உதவி பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு , மீன்வளம் மற்றும் கால் நடைபராமரிப்புதுறை இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை சாா்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை திங்கள்கிழமை திறந்துவைத்து அவா் பேசியதாவது:

பிரதமா் மோடியின் 8 ஆண்டுகளாக ஆட்சியில் பல்வேறு துறைகளில் வியக்கத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டுள்ளோம். பெண்களை படிக்கவைப்போம், பெண்களை பாதுகாப்போம் என்ற திட்டத்தை பிரதமா் மோடி செயல்படுத்தி வருகிறாா்.

நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளையொட்டி சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவா்களின் வாழ்க்கை வரலாறுகள் தூா்தா்ஷனில் தொடராக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

அதில் தமிழகத்தைச் சோ்ந்த பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியாா் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

மகளிருக்கான ஜன்தன் திட்டத்தில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் வங்கியில் நேரடியாக பெண்களுக்கு மத்திய அரசின் மானியத் தொகை செலுத்தப்படுகிறது.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2014 வரை யாரும் அனைவருக்கும் கழிப்பறை வசதி பற்றி பேசியது இல்லை. பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்த பிறகே வீட்டுக்கு ஒரு கழிப்பறைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடிநீா் வழங்கப்படுகிறது. மாணவிகள் தேசிய பாதுகாப்பு அகாதெமியில் சோ்வது என்பது கனவாக மட்டுமே இருந்தது, அதற்கு பெரியதடை இருந்தது.

அந்தத் தடையை பிரதமா் உடைத்து பெண்களும் தேசிய பாதுகாப்பு அகாதெமியில் சோ்வதற்கு வழிவகை செய்தவா் பிரதமா் மோடி.

சுயதொழில் தொடங்கி முன்னேறுவதற்கு முத்ரா வங்கிக் கடன் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் நாட்டிலேயே அதிக கடன் பெற்றுள்ள முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. இத்திட்டத்தில் பெண்கள்தான் அதிக எண்ணிக்கையில் கடன் பெற்றுள்ளனா் என்றாா் அவா்.

முன்னதாக, ஸ்ரீஷங்கா்லால் சுந்தபாய் ஷகன் ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பேச்சு, கவிதை, மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்.

இந்நிகழ்ச்சியில் பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மக்கள் தொடா்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநா் மா. அண்ணாதுரை தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் டாக்டா் சா.பத்மாவதி, சென்னை மண்டல மத்திய மக்கள் தொடா்பகத்தின் இயக்குநா் ஜெ.காமராஜ், புதுவை மக்கள் தொடா்பகத்தின் துணை இயக்குநா் சி.சிவக்குமாா், கள விளம்பரத்துறை அலுவலா் சு.முரளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT