இந்தியா

இந்தியாவில் 121ஆக குறைந்த கரோனா பாதிப்பு! 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 121 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 121 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 121 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 4.46.80.215 கோடியாக உயர்ந்துள்ளது. 

கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 5,30,722 ஆக உயர்ந்துள்ளது. 
அதேநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,319 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 52 பேர் குணமடைந்த நிலையில், கரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,47,174 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போது நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 98.80 சதவீதமாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தில் இதுவரை 220.14 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் - அப்பாவு!

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா! | செய்திகள்: சில வரிகளில் | 21.11.25

பிகாரில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு! உள் துறையை விட்டுக்கொடுத்த நிதீஷ் குமார்

Mask movie review - சாலிகிராமத்தின் Money Heist! | Kavin

சூப்பர் ஓவரில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி வங்கதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT