இந்தியா

கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் சரத் பவார்!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு செவ்வாய்க்கிழமை மும்பையில் உள்ள மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகக் கட்சியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 

PTI

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு செவ்வாய்க்கிழமை மும்பையில் உள்ள மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகக் கட்சியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 

மூத்த என்சிபி தலைவர் அஜித் பவார் புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்வதாக இருந்தார், ஆனால் கண் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்ததால் அவர் பங்கேற்கவில்லை என்றும் சரத் பவாரின் மருமகன் திங்கள்கிழமை தெரிவித்தார். 

தெற்கு மும்பையில் உள்ள மருத்துவமனையில் சரத் பவாருக்கு இன்று கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

82 வயதான என்சிபி தலைவருக்கு முன்னதாக ஒரு கண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், இன்று மற்றொரு கண் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு சரத் பவாருக்கு வாய்ப் புண்ணை அகற்றும் மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சித்தராமையாவின் ஆட்சியை ராகுல் உறுதி செய்ய வேண்டும்: பாஜக சவால்!

பாகிஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 15 பேர் பலி

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு!

பிகார் தேர்தல்: 24,000 தபால் வாக்குகள் நிராகரிப்பு

லவ் தீம்... நிஹாரிகா ரய்ஸாதா!

SCROLL FOR NEXT