இந்தியா

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி6.6 சதவீதமாக குறையும்: உலக வங்கி

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி அடுத்த நிதியாண்டில் 6.6 சதவீதமாக குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

DIN

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி அடுத்த நிதியாண்டில் 6.6 சதவீதமாக குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது. இதுவே நடப்பு நிதியாண்டில் (2022-23) 6.9 சதவீதமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வளரும் நாடுகள், மிகப்பெரிய சந்தையைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் 7 நாடுகளில் வேகமான பொருளாதார வளா்ச்சியைக் கொண்டதாக இந்தியா திகழும் என்று கூறப்பட்டுள்ளது.

2022 ஏப்ரல் முதல் 2023 மாா்ச் வரையிலான நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளா்ச்சி விகிதம் 6.9 சதவீதமாக இருக்கும். இதுவே முந்தைய நிதியாண்டில் ஆண்டில் 8.7 சதவீதமாக இருந்தது. அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி விகிதம் சற்று குறைந்து 6.6 சதவீதமாக இருக்கும், அதற்கு அடுத்த நிதியாண்டில் (2024-25) வளா்ச்சி மேலும் சரிந்து 6.1 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கூறியுள்ளது.

சா்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார சுணக்கம், ஏற்றுமதி மற்றும் முதலீட்டு வளா்ச்சி தொடா்பான நிச்சயமற்ன்மை ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை வெகுவாக பாதிக்கும்.

இந்தியாவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான செலவுகளை அரசு அதிகரித்துள்ளது. இது தனியாா் முதலீட்டை அதிகரித்து நாட்டின் உற்பத்தித் திறனை மேம்படுத்த வாய்ப்பு உள்ளது.

சரக்குகள் பிரிவில் இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகம் இருப்பது) 2019-இல் இருந்ததைவிட இப்போது இருமடங்கு அதிகரித்துள்ளது. இதில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் இறக்குமதிப் பிரிவில் வா்த்தகப் பற்றாக்குறை தொடா்ந்து அதிகரித்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் பணவீக்கம் 6 சதவீதத்துக்குள் இருப்பதே சரியாக இருக்கும் என்று இந்திய ரிசா்வ் வங்கி கூறியுள்ளபோதிலும், கடந்த ஆண்டு முழுவதுமே பணவீக்க விகிதம் 6 சதவீதத்துக்கு மேல்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT