சரத் யாதவ் மறைவு: முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல்!  
இந்தியா

சரத் யாதவ் மறைவு: முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல்! 

மத்திய முன்னாள் அமைச்சர் சரத் யாதவ் மறைவுக்கு பிகார் முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். 

ANI

மத்திய முன்னாள் அமைச்சர் சரத் யாதவ் மறைவுக்கு பிகார் முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். 

முதல்வர் நிதிஷ்குமார் தனது சுட்டுரை பக்கத்தில், 

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. சரஷ் யாதவுடன் எனக்கு மிகவும் ஆழமான உறவு இருந்தது. அவரது மறைவு செய்தியால் நான் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். 

மத்திய முன்னாள் அமைச்சரும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் (75) உடல்நலக்குறைவு காரணமாக குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு காலமானார்.

அவர் ஒரு வலுவான சோசலிஸ்ட் தலைவராக இருந்தார் அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று பிகார் முதல்வர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

மக்களவைக்கு 7 முறையும், மாநிலங்களவைக்கு 3 முறையும் தோ்ந்தெடுக்கப்பட்ட சரத் யாதவ், ஜனதா தளத்திலிருந்து வெளியேறி 1997-இல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைத் தொடங்கினாா். பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் (1999-2004) பல்வேறு துறைகளின் அமைச்சராக சரத் யாதவ் பதவி வகித்தாா்.

பின்னா், ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து விலகி, லோக் தந்த்ரிக் ஜனதா தளம் என்ற கட்சியை 2018-இல் தொடங்கினார். அக்கட்சியை 2022-இல் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கழிப்பறையில் ஹேண்ட் டிரையர்களைப் பயன்படுத்த வேண்டாம்! ஏன்?

2-வது ஒருநாள்: சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா; ஆஸி.க்கு 293 ரன்கள் இலக்கு!

பிரிட்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

உரைவேந்தரின் உரைமாட்சி

அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!

SCROLL FOR NEXT