கோப்புப் படம் 
இந்தியா

தலைநகரில் அடா்த்தியான மூடுபனி: பல விமானங்கள், ரயில்கள் தாமதம்

புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்து ஏற்கனவே குளிர் அலையில் தத்தளித்து வரும் தேசிய தலைநகர் தில்லியில் புதன்கிழமையன்று அடா்த்தியான மூடுபனியால் காண்பு திறன் குறைந்தது.

DIN


புது தில்லி: புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்து ஏற்கனவே குளிர் அலையில் தத்தளித்து வரும் தேசிய தலைநகர் தில்லியில் புதன்கிழமையன்று அடா்த்தியான மூடுபனியால் காண்பு திறன் குறைந்தது. இதனால், பல விமானங்கள் மற்றும் ரயில்கள் குறைந்த காண்பு திறன் காரணமாக தாமதமாக இயங்கின.

தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து (ஐஜிஐ) புறப்பட வேண்டிய பல விமானங்கள் பனிமூட்டமான வானிலை காரணமாக தாமதமாகியதாக விமான நிலைய அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார்.

பனிமூட்டம் காரணமாக 6 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பாரௌனி-புது தில்லி குளோன் ஸ்பெஷல், காமாக்யா-தில்லி பிரம்மபுத்ரா மெயில், விசாகப்பட்டினம்-புது டெல்லி ஆந்திர பிரதேச எக்ஸ்பிரஸ், சுல்தான்பூர்-ஆனந்த் விஹார் டெர்மினல் சத்பவானா எக்ஸ்பிரஸ், ஜபல்பூர்-ஹஸ்ரத் நிஜாமுதீன் கோண்ட்வானா, மாணிக்பூர்-ஹஸ்ரத் நிஜாமுதீன் உத்தர்க்பூர்-ஹஸ்ரத் சம்பர்தின் எக்ஸ்பிரஸ், 1 மணிநேரம் வரை தாமதமாக இயக்கப்படுவதாக  வடக்கு ரயில்வே அதிகாரிகளின் தெரிவித்தனர்.

வடமேற்கு இந்தியாவின் பனிமூட்டம், குளிர் நிலைமைகள் ஜனவரி 19 முதல் குறைய வாய்ப்புள்ளது என்றும் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமேற்கு இந்தியாவின் சமவெளிகளில் ஜனவரி 22 முதல் ஜனவரி 25 வரை மழை, இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT