இந்தியா

ஆனந்த் - ராதிகா நிச்சயதார்த்தம்; மணமக்களுக்கு ஆச்சரியம் அளித்த அம்பானி குடும்பம்

முகேஷ் அம்பானி - நீதா தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் அம்பானியின் இல்லத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

DIN


முகேஷ் அம்பானி - நீதா தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் அம்பானியின் இல்லத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மும்பையில் உள்ள தங்களது ஆன்டிலியா இல்லத்தில் ஜனவரி 19ஆம் தேதி மாலை நடைபெற்ற இந்த நிச்சயதார்த்தத்தில் ஏராளமான நட்சத்திர பிரபலங்கள் பங்கேற்றனர்.

தொழிலதிபர் விரென் மெர்சண்ட் மகள் ராதிகா மெர்சண்ட். இவர்களது திருமணம் 2019ஆம் ஆண்டில் இரு குடும்பத்தாரால் முடிவு செய்யப்பட்டது.

தங்களது குஜராத்தி இந்து குடும்ப முறைப்படி, குலதெய்வக் கோயிலில் நிச்சயதார்த்த சடங்குகள் வெகு சிறப்பாக நடந்து முடிந்ததாக அம்பானி தெரிவித்திருந்தார். நேற்று மாலை நிச்சயதார்த்தம், ஆனந்த் அம்பானியின் சகோதரி இஷா, மெர்சண்ட் வீட்டுக்குச் சென்று, மணமகள் ராதிகாவை நிகழ்ச்சிக்கு முறைப்படி அழைத்துவந்தார்.

தங்க நிற லெஹங்காவை அணிந்து கொண்ட தாரகை போல மின்னினார் ராதிகா. மணமகன் ஆனந்த் நீல நில ஆடையை அணிந்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில், நிச்சயதார்த்தம் செய்யும் தம்பதிக்கு நீதா அம்பானி மிகப்பெரிய ஆச்சரியத்தை வைத்திருந்தார். யாரும் எதிர்பாராத வகையில், அம்பானி தனது குடும்பத்தினருடன் மேடையேறி மிக அழகாக நடனமாடி மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்லியது, மணமக்களையும், விருந்தினர்களையும் ஆனந்தக் கடலில் ஆழ்த்தியது.

முன்னதாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் தான், ராதிகாவின் அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு நீதா அம்பானி வெகு சிறப்பான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய ஜூனியா் ஹாக்கி அணி சென்னை வருகை

தேச ஒற்றுமை விழிப்புணா்வு சைக்கிள் பயணக் குழு கரூா் வருகை!

மாணவா்களிடையே நூலகப் பயன்பாட்டை ஏற்படுத்துதல் அவசியம்!

லாரி மோதி எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

பட்டாசு ஆலைக்குள் மயங்கி விழுந்தவா் பலி! இழப்பீடு கோரி உறவினா்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT