இந்தியா

மூத்த குடிமக்களுக்கு ரயிலில் இலவச புனிதப் பயணம்: ஜன.21 முதல் தொடக்கம்!

PTI

மத்தியப் பிரதேசத்தில் மூத்த குடிமக்களுக்கான இலவச புனிதப் பயணத் திட்டம் ஜனவரி 21(சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது. 

இதுகுறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராஜேஷ் ரஜோரா கூறுகையில், 

மூத்த குடிமக்களுக்கான இந்தாண்டு புனிதப் பயணத் திட்டத்தின் கீழ் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேரை பல்வேறு மதத் தலங்களுக்கு அழைத்துச் செல்ல அரசு திட்டமிட்டுள்ளது. 

ஜனவரி 21 முதல் மார்ச் 29 வரை நாட்டின் பல்வேறு புனித இடங்களுக்கு மூத்த குடிமக்களை அழைத்துச் செல்வதற்காக மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து 20 ரயில்கள் இயக்கப்படுகிறது. 

முதன்முதலில் இலவச புனிதப் பயணத் திட்டம் 2012இல் தொடங்கப்பட்டது. கரோனா தொற்றுநோய்களின் காரணமாக இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ம.பி.யை அடுத்த இந்த புனிதப் பயணத் திட்டம் பல்வேறு மாநிலங்களிலும் தொடங்கியுள்ளன. 

இந்த பயணத்தில் முதியவர்கள் ராமேஸ்வரம், துவாரகா, காமாக்யா, ஷீரடி, ஜகன்னாத் புரி, அயோத்தி மற்றும் காசி (வாரணாசி) ஆகிய இடங்களுக்குச் செல்ல முடியும். 

மாநிலத்தில் வரி செலுத்தாத 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இந்த புனிதப் பயணத்திற்கு தகுதியானவர்கள். பெண்களுக்கு 2 ஆண்டுகள் தளர்வு உண்டு. இந்தத் திட்டத்தின் கீழ் ரயிலில் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, குடிநீர், தங்கும் வசதி, பேருந்தில் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் ஆகிய அனைத்தும் அரசு இலவசமாக செய்து தருகிறது.

60 சதவீதத்திற்கு மேல் ஊனமுற்றவர்களுக்கு புனிதப் பயணம் செய்ய வயது வரம்பு இல்லை.

புனிதப் பயணம் செல்ல விரும்பும் தம்பதியர், அவர்களில் ஒருவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயதை விடக் குறைவாக இருந்தால், அத்தகைய தம்பதியர் புனிதப் பயணத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். 

65 வயதுக்கு மேற்பட்ட தனி நபர்களும், 60 சதவீதத்துக்கும் அதிகமான ஊனமுற்றவர்களும் தங்களுடன் ஒரு பராமரிப்பாளரை இலவசமாக அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT