இந்தியா

ராகுல் காந்திக்கு பிரதமராகும் திறன் உள்ளது: சஞ்சய் ரௌத்

ராகுல் காந்திக்கு இந்தியாவின் பிரதமராகும் திறன் உள்ளது என சிவசேனை எம்.பி சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

DIN

ராகுல் காந்திக்கு இந்தியாவின் பிரதமராகும் திறன் உள்ளது என சிவசேனை எம்.பி சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தொடரும் இந்த ஒற்றுமை நடைப்பயணம் வெறுப்புணர்வை நீக்க மேற்கொண்டு வரும் பயணம் எனவும் தெரிவித்தார்.

இது குறித்து சிவசேனை எம்.பி சஞ்சய் ரௌத் கூறியதாவது: ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்த ஒற்றுமை நடைப்பயணம் வெறுப்புணர்வுக்கு எதிரானதாகும். அவர் இந்தியாவை ஒன்றினைக்க கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்த நடைப்பயணத்தை முன்னெடுத்துள்ளார். கட்சிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதையெல்லாம் தவிர்த்து ராகுல் காந்தி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவரது தலைமைப் பண்புகளை நிரூபிப்பார்.

2024 தேர்தலில் அவர் அதிசயங்களை நிகழ்த்துவார். பாஜக அவரது இந்த ஒற்றுமை நடைப்பயணம் குறித்து தவறாக தகவல்களை பரப்பி வருகிறது. அனைவராலும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடக்க முடியாது. 3500 கிலோ மீட்டர் தூரம் நடப்பதற்கு மன உறுதியும், மக்கள் மீது அளவுகடந்த அன்பும் வேண்டும். ராகுல் காந்தி, தான் பிரதமர் பதவிக்கு போட்டியிடத் தயாராக இல்லை எனக் கூறுகிறார். ஆனால், மக்கள் அவரை பிரதமராகப் பார்க்க விரும்பினால் அவருக்கு வேறு வழியே கிடையாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு எதிரான மகளிா் ஆணைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மனமகிழ் மன்றத்தை மூடக்கோரி உதவி ஆட்சியரிடம் தவெக மனு

பணி நிரந்தரம் கோரி தமிழகம் முழுவதும் செவிலியா்கள் தா்னா

திருவண்ணாமலை மலைப்பகுதி, நீா்நிலைகளை ஆக்கிரமிப்பாளா்களை உடனடியாக அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT