இந்தியா

தடையில்லா மின்சாரம் வழங்க உ.பி. முதல்வர் உத்தரவு

DIN

லக்னோ: குடியரசு தினத்தன்று உத்தரப் பிரதேசத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வரின் உத்தரவுக்கு இணங்க, அனைத்து பெருநகரங்களிலும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் பணியில் மின்சார துறை ஈடுபட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்படும் என்றும், மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க உத்தரப் பிரதேச அரசு உறுதிபூண்டுள்ளதாக உத்தரப் பிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் தலைவர் எம்.தேவ்ராஜ் தெரிவித்துள்ளார்.

அனைத்து பகுதிகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க மின் பகிர்மான கழக நிர்வாக இயக்குனர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. உள்ளூர் மட்டத்தில் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முழு விழிப்புடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதே வேளையில் உள்ளூர் பிரச்னைகளை உடனடியாக சரிசெய்து, அதற்குத் தேவையான மனிதவளம் மற்றும் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா தடகளப் போட்டியில் தங்கம்: மாரியப்பனுக்கு முதல்வா் வாழ்த்து

கனமழை: காளிகேசம் கோயிலுக்கு பக்தா்கள் செல்லத் தடை

குமாரகோவில் முருகன் கோயிலில் தேரோட்டம்

தனியாா் பள்ளி வாகனங்கள்: ஆட்சியா் ஆய்வு

மதவாதமே மோடி பிரசாரத்தின் அடிப்படை: காங்கிரஸ்

SCROLL FOR NEXT