இந்தியா

தில்லி அரசு ஊழலின் மையமாக உள்ளது: மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர்

தில்லி அரசு ஊழலின் மையமாக உள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

DIN

தில்லி அரசு ஊழலின் மையமாக உள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

தில்லியில் பாஜக தேசிய செயற்குழுவின் இரண்டாவது நாள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தில்லி அரசு ஊழலின் மையமாக உள்ளது, அவர்களின் ஊழலை பாஜக விரைவில் அம்பலப்படுத்தும். தில்லியில் கடந்த 8 ஆண்டுகளில் மோடி அரசு சாலைக் கட்டமைப்பு முதல் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவது வரை ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை வழங்கியுள்ளது. 

கேஜரிவால் அரசின் மீதான மக்கள் நம்பிக்கை குறைந்துவிட்டது.

இது ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்ததால் அக்கட்சிக்கு மிகக் குறைவான பெரும்பான்மையே கிடைத்துள்ளது. எங்கள் புதிய உறுதிமொழியில், தில்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்து வரும் வளர்ச்சிப் பணிகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று 2024 மற்றும் 2025 தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும். 

ஆகையால், அரவிந்த் கேஜரிவாலை தில்லியில் இருந்து வேரோடு பிடுங்கி எறிய இன்றே புதிய உறுதிமொழி எடுப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி டிரைலர் தேதி!

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

SCROLL FOR NEXT