ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு கார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட 40 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஜெய்ஷ்-இ-முகமது தற்கொலைப் படையினரால் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்று பேருந்து தகர்க்கப்பட்ட இடத்தில் பாரஸ் ஜோடோ யாத்திரையின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் காந்தி உயிரிழந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
ஸ்ரீநகர் நோக்கிச் சென்ற அணிவகுப்பு, கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
காந்தி தலைமையில் செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய நடைப்பயணம் ஜனவரி 30ஆம் தேதி ஸ்ரீநகரில் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.