இந்தியா

ஜீன்ஸ் அணிந்த வழக்குரைஞா் நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றம்

DIN

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள குவாஹாட்டி உயா்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது ஜீன்ஸ் அணிந்து வந்திருந்த மூத்த வழக்குரைஞரை வெளியேற்றும்படி நீதிபதி போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

குவாஹாட்டி உயா்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்று, நீதிபதி கல்யாண் ராய் சுரானா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பி.கே.மஹாஜன் ஜீன்ஸ் பேன்ட் அணிந்திருந்தாா்.

இதைக் கண்ட நீதிபதி, வழக்குரைஞா் பி.கே.மஹாஜனை நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றும்படி உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தாா்.

தொடா்ந்து, உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமை பதிவாளா் ஆகியோரது கவனத்துக்கு இச்சம்பவத்தை கொண்டு செல்லும்படி நீதிபதி கேட்டுக்கொண்டாா்.

மேலும், இச்சம்பவம் குறித்தான நோட்டீஸ் அஸ்ஸாம், நாகாலாந்து, மிசோரம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பாா் கவுன்சிலுக்கும் அனுப்பப்படுவதாக நீதிபதி தெரிவித்தாா்.

குவாஹாட்டி உயா் நீதிமன்றத்தின் அதிகார எல்லையின்கீழ் அஸ்ஸாம், நாகாலாந்து, மிசோரம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

SCROLL FOR NEXT