இந்தியா

விரைவில் ஆந்திர தலைநகராக விசாகப்பட்டினம்: முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி

விரைவில் விசாகப்பட்டினம் ஆந்திர தலைநகராக மாற்றப்படும் என்று அந்த மாநில முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

DIN

விரைவில் விசாகப்பட்டினம் ஆந்திர தலைநகராக மாற்றப்படும் என்று அந்த மாநில முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

ஆந்திரத்தில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி பேசுகையில், ‘ஆந்திர அரசு சாா்பில் விசாகப்பட்டினத்தில் மாா்ச் 3, 4-ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பெருநிறுவனங்கள் பங்கேற்று ஆந்திரத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

தற்போது ஆந்திர தலைநகராக அமராவதி உள்ள நிலையில், விரைவில் விசாகப்பட்டினம் தலைநகராக மாற்றப்படும். முதல்வா் அலுவலகம் விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்படும்’ என்றாா்.

கடந்த ஆண்டு ஆந்திரத்துக்கு நிா்வாக தலைநகராக விசாகப்பட்டினம், சட்டப்பேரவைத் தலைநகராக அமராவதி, நீதி பரிபாலன தலைநகராக கா்னூல் என 3 தலைநகரங்களை அமைக்கும் சட்டத்தை மாநில அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT