இந்தியா

குஜராத் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்: அமித் ஷா

குஜராத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதற்கான சூழல் நிலவுவதால் இந்த கடினமான சூழலில் மத்திய மற்றும் மாநில அரசு குஜராத் மக்களுடன் துணை நிற்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

DIN

குஜராத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதற்கான சூழல் நிலவுவதால் இந்த கடினமான சூழலில் மத்திய மற்றும் மாநில அரசு குஜராத் மக்களுடன் துணை நிற்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத் கனமழை நிலவரம் குறித்தும் அம்மாநில முதல்வர் பூபேந்திர படேலிடம் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: குஜராத்தில் பெய்து வரும் கனமழை காரணத்தினால் அரசு மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேலிடம் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புக்கான நிலவரம் குறித்து கேட்டறிந்தேன். தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில தேசிய பேரிடர் மீட்புக் குழு ஆகியவை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயார் நிலையில் உள்ளன. உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து அவர்கள் மக்களுக்கு உதவியும் வருகின்றனர். இந்த கடினமான நேரத்தில் மத்திய மற்றும் மாநில அரசு மக்களுடன் துணை நிற்கும் எனப் பதிவிட்டுள்ளார்.

குஜராத் கனமழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கட்ச், ஜாம்நகர், ஜூனாகத் மற்றும் நவ்சரி ஆகிய மாவட்டங்களில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் உதவிக்காக குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT