இந்தியா

சரத் பவார் கலக்கமடையவில்லை; மக்கள் ஆதரவு உள்ளது: சஞ்சய் ரௌத்

தேசியவாத கட்சியில் ஏற்பட்ட பிளவினால் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் கலக்கமடையவில்லை எனவும், புதிதாக அவரால் கட்சியை வலுப்படுத்த முடியும் எனவும் சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்தார்.

DIN

தேசியவாத கட்சியில் ஏற்பட்ட பிளவினால் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் கலக்கமடையவில்லை எனவும், புதிதாக அவரால் கட்சியை வலுப்படுத்த முடியும் எனவும் சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உடனான மோதல் காரணத்தினால் கட்சியிலிருந்து அஜித் பவார் விலகினார். அவர் மகாராஷ்டிர சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவர் ராஜிநாமா செய்தார். இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரஸில் இருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும் பாஜக கூட்டணியில் இன்று இணைந்தனர். பாஜகவில் இணைந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். 

இந்த நிலையில், தேசியவாத கட்சியில் ஏற்பட்ட பிளவினால் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் கலக்கமடையவில்லை எனவும், புதிதாக அவரால் கட்சியை வலுப்படுத்த முடியும் எனவும் சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறிருப்பதாவது: நான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரிடம் பேசினேன். மக்கள் ஆதரவு நமக்கு இருக்கிறது. நான் உறுதியாக இருக்கிறேன். மக்கள் நம் பின்னால் இருக்கிறார்கள்.  நாம் உத்தவ் தாக்கரேவுடன் இணைந்து புதிதாக தொடங்குவோம் என அவர் தெரிவித்தார். சிலர் மகாராஷ்டிர அரசியலை முழுவதுவமாக சீர்குலைக்க உறுதியாக இருக்கிறார்கள். இது போன்ற விஷயங்களை மக்கள் இனி சகித்துக் கொள்ள மாட்டார்கள் எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு கட்சி மட்டும் என்னை நலம் விசாரிக்கவில்லை; அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை! - ராமதாஸ்

மிகப்பெரிய டிஜிட்டல் கைது மோசடி! ரூ.58 கோடியை இழந்த தொழிலதிபர்!!

2 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் இணைந்த கேன் வில்லியம்சன்!

ஆந்திரத்தில் பிரதமர் மோடி: சந்திரபாபு நாயுடு உற்சாக வரவேற்பு!

சித்த மருத்துவ பல்கலை. மசோதா மீது ஆளுநர் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT