இந்தியா

மத்தியப்பிரதேசத்தில் உச்சம் தொட்ட தக்காளி விலை: கிலோ ரூ.160!

தக்காளி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மத்தியப்பிரதேசம் மாநிலம் ராய்சென் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.160 என்ற புதிய உச்சத்தை அடைந்தது.

DIN


ராய்சென்: தக்காளி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மத்தியப்பிரதேசம் மாநிலம் ராய்சென் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.160 என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

கடந்த வாரம் நாடு முழுவதும் தக்காளி விலை ரூ.100 என்ற உச்சத்தை எட்டியது. ஓரிருநாளில் ஏற்பட்ட இந்த திடீா் விலை உயா்வு மக்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே தக்காளி விலை உயா்வு தற்காலிகமானது தான் என மத்திய அரசு விளக்கமளித்தது.

இந்த நிலையில், மத்தியப்பிரதேசத்தின் ராய்சென் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.160 என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளதாகவும், மாநிலத்தின் பிற பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனையாவதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தக்காளி விலை 160 ரூபாயை எட்டியது குறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் துபேயிடம் கேட்டபோது, தக்காளியின் தேவை அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் 

இதுகுறித்து ராய்சென் மாவட்ட ஆட்சியா் அரவிந்த் துபேயிடம் கேட்டபோது, ‘தக்காளியின் தேவை அதிகரிப்பு மற்றும் அதன் வினியோகத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையே இந்த விலையேற்றத்துக்கு காரணம் என்றார்.

"ஒரு பொருளின் தேவை குறைவாகவும், உற்பத்தி அதிகமாகவும் இருந்தால், விலை குறைகிறது" என்றும் நாடு முழுவதும் தக்காளி விலை அதிகமாகவே உள்ள நிலையில் ராய்சென் மட்டும் விதிவிலக்கல்ல. மாவட்டத்தில் தக்காளி உற்பத்தியில் பாரி பகுதி முதலிடம் வகிக்கிறது. மேலும் மாவட்டத்தில் இருந்து விளைவிக்கப்படும் தக்காளி தென்னிந்தியா மற்றும் நேபாளத்துக்கு அனுப்பப்படுகின்றன’ என்றாா். 

இதனிடையே, தக்காளி விலை உயர்வுக்கு இடைத்தரகர்களே காரணம் என தக்காளி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விவசாயிகள் கன்பத் சிங் குஷ்வாஹா, சீதாராம் குர்மி மற்றும் மனோஜ் படேல் ஆகியோர் கூறுகையில், இடைத்தரகர்கள் விவசாயிகளிடமிருந்து தக்காளியை கிலோ ரூ. 20க்கு கொள்முதல் செய்து மொத்த வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வரும் இடைத்தரகா்களே இந்த விலையேற்றத்துக்கு காரணம் என குற்றஞ்சாட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோல்வியில் துவண்ட சஞ்சு சாம்சனுக்கு கம்பீர் அளித்த நம்பிக்கை!

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்: ராகுல் காந்தி

தில்லியில் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாளை(ஆக.11) பேரணி

ரஜினியின் முதல் திரைப்படம் - 50வது ஆண்டு கூலி வரை வெளியிடும் ஒரே திரையரங்கம்!

SCROLL FOR NEXT