ரூ.2,000 நோட்டுகள் 
இந்தியா

இதுவரை ரூ. 2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ. 2,000 நோட்டுகள் வாபஸ்!

இதுவரை 2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

DIN


தில்லி: இதுவரை 2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ஆா்பிஐ கடந்த மே 19-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, வங்கிக் கிளைகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றி, சில்லறையாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் செப்டம்பர் 30-க்குள் மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவித்தது.

இந்நிலையில், ஜூன் 30 வரை ரூ. 2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளில் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்தி:

“மே 19-ஆம் தேதி நிலவரப்படி புழக்கத்தில் ரூ. 3.56 லட்சம் கோடி 2,000 நோட்டுகள் இருந்த நிலையில், ரூ. 2.72 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மொத்த நோட்டுகளில் இது 76 சதவிகிதமாகும்.

வங்கிகளின் தகவலின்படி, 87 சதவிகித நோட்டுகள் வங்கிக் கணக்குகள் டெபாசிட்டும், 13 சதவிகித நோட்டுகள் வேறு மதிப்பிலான நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும், 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க அடுத்த 3 மாத காலகட்டத்தை பயன்படுத்தி செப்டம்பர் 30-க்குள் மாற்றிக் கொள்ளலாம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரியமான லெஹெங்கா... ஆம்னா ஷரீஃப்!

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

SCROLL FOR NEXT