இந்தியா

நீட் தேர்வில் மோசடி: தில்லியில் இருவர் கைது!

தலைநகர் தில்லியில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு எழுதுவதில் மோசடியில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

DIN

தலைநகர் தில்லியில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு எழுதுவதில் மோசடியில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நீட் தேர்வை எழுதுவதில் ஆள்மாறாட்டம் செய்ததாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், 2 மாணவர்களை கைது செய்து விசாரித்து வருவதாக தில்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

மருத்துவப் படிப்பு என்பது பல மாணவர்களின் கனவாக இருந்துவரும் நிலையில், வருடாவருடம் இதுபோன்ற ஆள்மாறாட்டம் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. 

நீட் தேர்வு எழுதுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்ற பின்னரே மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுகிறது. 

இருப்பினும், ஆள்மாறாட்டம் போன்ற மோசடிகள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக உள்ளது. இதுதொடர்பாக ஆந்திரம், உ.பி. ஆகிய மாநிலங்களில் ஒரு கும்பலே செயல்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT