இந்தியா

தில்லியில் பரபரப்பான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம்

புது தில்லியின் மேற்கு பகுதியிலுள்ள ஜனக்புரியில் கனமழை பெய்ததால் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. 

DIN

புது தில்லி: புது தில்லியின் மேற்கு பகுதியிலுள்ள ஜனக்புரியில் கனமழை பெய்ததால் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. 

பரபரப்பான சாலையில், உருவான மிகப்பெரிய பள்ளத்தால்,  சாலையில்   போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க அந்த பகுதியை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். 

சாலையில் உருவான பெரிய பள்ளத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது,  சாலையில் பள்ளம் உருவானது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக அச்சாலை போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டது.

இதனை உடனடியாக சீரமைக்க சம்மந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சரிசெய்யும் பணிகள் நடைபெற்றன என்று தெரிவித்துள்ளார்.

இந்த பள்ளத்தால், ஜனக்புரியில் உள்ள பங்கா சாலை மற்றும் மங்கோல்புரியிலிருந்து ஜனக்புரி நோக்கிவரும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜஸ்தானில் கோர விபத்து: பிக்-அப் வாகனம் லாரியுடன் மோதியதில் 11 பேர் பலி

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டிரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி! அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT