இந்தியா

பாஜக பிரமுகரின் செயலால் மனித குலத்துக்கே அவமானம்: ராகுல் காந்தி கண்டனம்

மத்திய பிரதேசத்தில் பழங்குடியை சேர்ந்தவர் மீது பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த சம்பவத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

DIN

மத்திய பிரதேசத்தில் பழங்குடியை சேர்ந்தவர் மீது பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த சம்பவத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சித்தி மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியின இளைஞா் மீது பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா என்ற நபா் சிறுநீா் கழித்த சம்பவம் குறித்த விடியோ சமூக ஊடகங்களில் செவ்வாய்க்கிழமை வேகமாகப் பரவியது.

இதனைத் தொடர்ந்து, தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் பிரவேஷ் சுக்லாவை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், பாஜக ஆட்சியில் பழங்குடி சகோதர, சகோதரிகள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மத்தியப் பிரதேசத்தின் பாஜக நிர்வாகியின் மனிதாபிமான மற்ற குற்றத்தால் ஒட்டுமொத்த மனித குலமே அவமானத்தை சந்தித்துள்ளது.

பழங்குடியின மற்றும் தலித் சமூக மக்கள் மீதான பாஜகவின் உண்மையான முகமும், குணமும் இதுதான்.” என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT