இந்தியா

பெண் குழந்தை பிறந்ததால் விரக்தியடைந்த தாய்: மகளை ரூ.800-க்கு விற்ற அவலம்!

பழங்குடியின பெண் ஒருவர் தனது இரண்டாவது பெண் குழந்தையை ரூ.800-க்கு விற்பனை செய்த அவலம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது. 

DIN

பழங்குடியின பெண் ஒருவர் தனது இரண்டாவது பெண் குழந்தையை ரூ.800-க்கு விற்பனை செய்த அவலம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது. 

கராமி முர்மு என்ற பழங்குடியின பெண் வறுமை சூழலில் இருந்துள்ளார். ஏற்கனவே அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்துள்ள நிலையில், அவருக்கு  இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கராமி மிகவும் விரக்தியடைந்தார். 

குழந்தையை எப்படியாவது விற்றுவிட வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான முயற்சிகளில் கராமி ஈடுபட்டார். அதன்பின்னர் பிப்ரசரன்பூர் கிராமத்தைச் சேர்ந்த புலாமனி - மராண்டி தம்பதியர்களிடம் தனது எட்டு மாத குழந்தையை ரூ.800-க்கு கராமி விற்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் கேட்கையில் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். 

அதன்பின்னர், குழந்தையின் தந்தை முசு முர்மு தமிழகத்திலிருந்து வீடு திரும்பிய நிலையில், தனது இரண்டாவது மகளைப் பற்றி விசாரித்துள்ளார். குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார் கராமி. 

மனைவி சொன்னதை முர்முவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிற நாள்களுக்குப் பிறகு அயலார் ஒருவர் குழந்தை நன்றாக இருந்ததாகவும், சந்தைக்குச் சென்று கராமி திரும்பும்போது குழந்தையை அவளிடம் இல்லை என்றும் தெரிவித்தனர். 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தந்தை இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தார். தகவலறிந்த போலீஸார் கராமியை கைது செய்து குழந்தையை ஒப்படைத்த தகவலை கேட்டறிந்தனர். 

பின்னர், போலீஸ்ர் குழந்தையை மீட்டு, காப்பகத்திற்கு கொண்டு சேர்த்தனர்.இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT