இந்தியா

சந்திராயன் 3 ஜூலை 14-ல் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ

DIN

ஸ்ரீஹரிகோட்டா: சந்திராயன்-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 14ஆம் தேதி பிற்பகல்  2.35 மணிக்கு ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 

நிலவை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திராயன்-3  விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.  

கடந்த 2008 மற்றும் 2019ஆம் ஆண்டில் சந்திரயான்-1 மற்றும் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தபட்டது. அதனைத் தொடர்ந்து சந்திராயன் -3 விண்கலம் உருவாக்கும் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டது.

நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோடாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுத்தளத்துக்கு சென்றடைந்தது. மேலும் சந்திராயனை ஏவுவதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், சந்திராயன்-3 விண்கலம் ஜூலை  14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாயும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT