இந்தியா

ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பு நாளை(ஜூலை 7)க்கு ஒத்திவைப்பு!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பு நாளை(வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

DIN

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பு நாளை(வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அடுத்து நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவ்வப்போது கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் நடைபெறவுள்ள மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

மேலும் தற்போது நாட்டில் அமைதியின்மை சூழ்நிலை நிலவும் மணிப்பூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசினார். 

இந்நிலையில் ராகுல் காந்தி இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது. 

இன்று ராஜஸ்தான் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதால் ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பு நாளைய தினம்(ஜூலை 7, வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT