முகப்பு
கோப்புப் படம்
இந்தியா

கர்நாடகத்தில் கனமழை: கடலோர மாவட்டங்களுக்கு தொடரும் எச்சரிக்கை!

கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியா

கர்நாடகத்தில் கனமழை: கடலோர மாவட்டங்களுக்கு தொடரும் எச்சரிக்கை!

கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:18 PM
கோப்புப் படம்
பகிர்:

கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த இரண்டு நாள்களாக கடலோர மாவட்டங்களான உடுப்பி, தக்ஷிண கன்னடா, உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. எனவே, இந்த மாவட்டங்களில் ஜூலை 7 வரை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பன்ட்வாலில் உள்ள சஜிபமுன்னுரு கிராமத்தைச் சேர்ந்த நந்தவாரகும்புவில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் சிக்கியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

கனமழையால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டதாக மாவட்ட பேரழிவு மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

மல்கி மற்றும் மங்களூரு, பாண்ட்வால் தாலுகாவிலும் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. 

மேலும், குக்கே சுப்ரமண்யாவில் உள்ள குமாரதாரா நதி கனமழையால் மூழ்கியுள்ளது. கடந்த இரண்டு நாள்களில் 29 வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், கடலோர மாவட்டங்களான தக்ஷிண கன்னடா, உடுப்பி மற்றும் உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் எச்சரிக்கையும், சனிக்கிழமையன்று ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

தக்ஷிண கன்னடா மற்றும் உடுப்பியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கான இன்று விடுமுறை அறிவித்துள்ளன.
 
முழு கட்டுரையைப் படிக்க →