இந்தியா

தில்லியில் அமித்ஷாவுடன் ஆளுநர் ரவி சந்திப்பு!

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக ஆளுநர் ஆன்.என்.ரவி இன்று சந்தித்தார். 

DIN

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக ஆளுநர் ஆன்.என்.ரவி இன்று சந்தித்தார். 

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக முதல்வருக்கு ஆளுநர் கடிதம் எழுதினார். 

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட்டு, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்குரைஞரிடம் ஆலோசனை நடத்துமாறு ஆளுநருக்கு அறிவுரை வழங்கியது. இதையடுத்து தனது கடிதத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வருக்கு ஆளுநர் மீண்டும் கடிதம் எழுதினார். 

இந்த பரபரப்பான சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை தில்லிக்குச் சென்றடைந்தார். அவர் ஒரு வாரம் தில்லியில் தங்கி ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், ஆளுநர் ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று தில்லியில் சந்தித்துள்ளார். தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் சூழல் மற்றும் பொது சிவில் சட்டம் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு

உத்தரகண்டில் மழை, வெள்ளம்: 2,500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது - தோ்தல் அதிகாரிகள் தகவல்

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

அலைகடலுக்கு அப்பால்...

SCROLL FOR NEXT