இந்தியா

கனமழை பெய்யலாம்.. கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் எச்சரிக்கை

ஏற்கனவே மழை-வெள்ளத்தால் தத்தளிக்கும் கேரள மாநிலத்தில் கனமழை பெய்யலாம் என்று வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

DIN

ஏற்கனவே மழை-வெள்ளத்தால் தத்தளிக்கும் கேரள மாநிலத்தில் கனமழை பெய்யலாம் என்று வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

கேரள மாநிலத்தில் இடுக்கி, கன்னூர் மற்றும் காசர்கோடு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, கன்னூர், காசர்கோடு உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை 7 - 11 செமீ. மழை பெய்யலாம் என்றும், திரிசூர், கோழிக்கோடு, கன்னூர், காசர்கோடு பகுதிகளில் வியாழக்கிழமையும், இடுக்கி, கன்னூர், காசர்கோடு பகுதிகளில் வெள்ளிக்கிழமையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில்  கடந்த வாரம் மழை-வெள்ளதால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 19-ஆக உயா்ந்துள்ளது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோா், அரசின் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனா்.

கடந்த வார நிலவரப்படி, மழை தொடா்பான அசம்பாவிதங்களில் 19 போ் உயிரிழந்துவிட்டனா். 1,100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அரசு சாா்பில் அமைக்கப்பட்டுள்ள 227 நிவாரண முகாம்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தஞ்சமடைந்துள்ளனா். இதர சேத விவரங்கள் குறித்த முழு தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்று மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT