கோப்புப் படம் 
இந்தியா

உள்ளாட்சித் தேர்தலில் நம்பிக்கையில்லை: பாஜக

மேற்கு வங்கத்தில் கடந்த 8ஆம் தேதி கிராம உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 73,887 இடங்களுக்கான தேர்தலில் 2.06 லட்சம் வேட்பாளா்கள் போட்டியிட்டனர். 

DIN


மேற்கு வங்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நம்பிக்கையில்லை என பாஜக தெரிவித்துள்ளது. 

மேற்கு வங்கத்தில் கடந்த 8ஆம் தேதி கிராம உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 73,887 இடங்களுக்கான தேர்தலில் 2.06 லட்சம் வேட்பாளா்கள் போட்டியிட்டனர். 

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது கலவரம் ஏற்பட்டதால், பதற்றமான சூழல் நிலவியது. தேர்தலையொட்டி நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 12 போ் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நம்பிக்கையில்லை என பாகஜ மாநில பொதுச்செயலாளர் அக்னிமித்ரா பால் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, நடந்து முடிந்த கிராம உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு (பாஜக) நம்பிக்கையில்லை. தேர்தலின்போது எங்கும் வன்முறை நிலவியது. மம்தா அரசின் அதிகாரிகள் கட்டாயத்தின்பேரில் வாக்குப்பதிவை நிறைவு செய்தனர். மத்திய அரசுப் படைகளை மாநில அரசு உள்ளே வர விடவில்லை. பல்வேறு வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா இல்லை. பல மையங்களில் ஒற்றை இலக்க வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வியடைந்துள்ளது. மேற்கு வங்க மக்கள் திரிணமூல் காங்கிரஸை தூக்கி எரிய சாலைக்கு வந்துவிட்டனர். அதில்தான் எங்கள் வெற்றி பதிவாகியுள்ளது எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

சீனா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

தமிழ் இனத்துக்கும் சமூக நீதிக்கும் விரோதி திமுக! - Tamilisai Soundararajan

SCROLL FOR NEXT