தமிழ் ஆடி மாதம், மலையாளம் கருக்கிடக மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது.
கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில், தமிழ் ஆடி மாதம், மலையாளம் கருக்கிடக மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஜூலை 21ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்றும் sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 நாட்களும் வழக்கமான பூஜைகளோடு, தினமும் இரவு 7 மணிக்கு படிபூஜைகளும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.