இந்தியா

சந்திராயன் திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பயனளிக்கும்: பிரதமர் மோடி

சந்திராயன் திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நன்மை பயக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

DIN

சந்திராயன் திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நன்மை பயக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவின் சந்தியான் - 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதுக்கு வாழ்த்து தெரிவித்த பூடான் பிரதமருக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்தார். 

இது தொடர்பாக பூடான் பிரதமரின் அலுவலகம் சார்பில் ட்விட்டர் பதிவில் கூறிருப்பதாவது: சந்திராயன் - 3 திட்டத்துக்கான விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவின் சந்திராயன் - 3 திட்டத்தினால் மனித குலம் சிறப்பான பயனை அடையட்டும் எனப் பதிவிட்டுள்ளார். 

அந்தப் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டதாவது: உங்களது  மகிழ்ச்சியான வார்த்தைகளுக்கு நன்றி. உண்மையில் சந்திராயன் திட்டத்தின் வெற்றி ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் பயனளிக்கும் எனப் பதிவிட்டுள்ளார். 

சந்திராயன் -3 நேற்று முன் தினம் (ஜூலை 14) ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளது.

இதுவரை நிலவை ஆராய்வதில் அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகளே வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூா் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

சென்னை உள்பட 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(அக்.28) விடுமுறை!

மருத்துவா் மாதங்கி ராமகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வா் இரங்கல்

ஆந்திரத்தில் ‘மோந்தா’ புயல்! முதல்வா் சந்திரபாபுவுடன் பிரதமா் ஆலோசனை!

இன்று கரையைக் கடக்கிறது ‘மோந்தா’ புயல்! 9 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT