குஷ்பு (கோப்புப் படம்) 
இந்தியா

மணிப்பூர் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: குஷ்பு

மணிப்பூரில் பாலியல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

DIN

மணிப்பூரில் பாலியல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி கடந்த 2 மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது.

இந்நிலையில், குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கிய கலவரக்காரர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ இணையத்தில் வைரலான நிலையில் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மணிப்பூரில் வன்முறை தொடங்கிய நேரத்தில் கடந்த மே 4 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாகத் தெரிகிறது. 

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'எந்தவொரு சூழ்நிலையிலும் இத்தகைய குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனையைத் தவிர வேறு எதையும் கேட்க முடியாது. இதுபோன்ற கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட ஆண்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும், இதனை வேடிக்கை பார்த்தவர்களையும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

வகுப்புவாத கலவரங்கள், குடும்பச் சண்டை, தனிப்பட்ட பழிவாங்கல் அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகளுக்கு பெண்கள் குறிவைக்கப்படுகிறார்கள். சில ஆண்கள் எவ்வளவு முதுகெலும்பில்லாதவர்கள், கோழைத்தனமானவர்கள், பாதுகாப்பற்றவர்கள், மனிதாபிமானமற்றவர்கள் என்று இது காட்டுகிறது' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல்: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT