இந்தியா

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன: பாஜக குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மேற்குவங்கம் மற்றும் பிகாரிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளன. ஆனால், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தில் அரசியல் செய்வதாக பாஜக குற்றச்சாட்டு.

DIN

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மேற்குவங்கம் மற்றும் பிகாரிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளன. ஆனால், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தில் அரசியல் செய்வதாக பாஜக சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் குகி இனப் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விடியோ சமூக வலைத்தளங்களில் பரவி நாட்டில் கடும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது. பெண்களுக்கு எதிராக அரங்கேறிய இந்த கொடூரத்துக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பலரும் தங்களது கடுமையான கண்டங்களை முன்வைத்தனர். மகளிர் அமைப்புகள் பலவும் போராட்டங்களை முன்னெடுத்தன. 

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மேற்குவங்கம் மற்றும் பிகாரிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளன. ஆனால், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தில் அரசியல் செய்வதாக பாஜக சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக ராஜஸ்தானில் பதிவாகியுள்ளது. 33,000 வழக்குகள் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பானவை. மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT