இந்தியா

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?

ஜூலை 31-ஆம் தேதி பிறகு காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து நிதி அமைச்சகம் பரிசீலிக்காததால் வருமான வரி செலுத்துவோர் தங்கள் வருமானத்தை விரைவாக தாக்கல் செய்யுமாறு சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.

DIN

ஜூலை 31-ஆம் தேதி பிறகு காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து நிதி அமைச்சகம் பரிசீலிக்காததால் வருமான வரி செலுத்துவோர் தங்கள் வருமானத்தை விரைவாக தாக்கல் செய்யுமாறு வருவாய் செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தாக்கல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று செய்தி நிறுவனமான பி.டி.ஐ.க்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.

வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம். ஏனெனில் ஐடிஆர் தாக்கல் கடந்த ஆண்டை விட மிக வேகமாக உள்ளது என்ற போதிலும், கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டாம் என்றும், எந்தவித நீட்டிப்புகளையும் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் நாங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

முந்தைய நிதியாண்டு கணக்கு தாக்கலுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதை போல, இம்முறையும் அவகாசம் நீட்டிக்கப்படுமா என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வருமான வரிகணக்கு தாக்கலுக்கான அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும், அபராதம் இன்றி தாக்கல் செய்ய ஜூலை 31-ஆம் தேதிக்கான காலக்கெடு நெருங்கி வருவதால், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்துகிறேன் என்றார் சஞ்சய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

தவெக சிறப்பு பொதுக்குழு தொடங்கியது! கரூரில் பலியானோருக்கு மெளன அஞ்சலி!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

SCROLL FOR NEXT